கோம்பையில் அடுக்கு நிலை நடுகற்கள்
தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.
கோம்பை கிராமத்தில் மூன்று அடுக்கு நிலை நடுகற்கள் கிடைத்துள்ளன. இரண்டு அடுக்கு நிலை நடுகற்கள் கோம்பை மேற்கில் அட்டக்குளம் இருக்கும் பகுதியிலும் மற்றொன்று கோம்பை கிழக்கு பகுதியிலும் (மாலையடி ) நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட வயற்பகுதியில் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment