Saturday, June 29, 2024

         கோம்பை தேர்த்திருவிழா 

           பட்டோலை

(ஓலைச்சுவடி  குறிப்புகள்)

கோம்பை  அருள்மிகு திருமலைராயப் பெருமாள் சுவாமி

விருத்தம்: 

* நல்ல சொற்பொருள் நாள் நடத்தவும் எல்லை காண்டரும் பேரின்பம் எய்தவும் வெல்லும் யானை முகத்தனை மேவி வாழ் வல்லமைக்குரியானை வாழ்த்துவோம், வேக மாடு நரி செரும் விடலை கழும் தாகபோகம் விதா கழ்ச்சியும் சோகவாரியினால் விருதுன்பமும் போக யானை முகத்தனை போற்றுவோம். சீர் தாகு இத் தேசத்தில் திங்கள் மும் மாரி பெய்ய மனங்களில் கஷ்டம் கலைந்திட யாரும் வாழ்க அறங்கள் தளைத்திட பாரில் இவ்வூறை பாடலுற்ற மறோ. 

* வட்டமுள்ள கடற்புவி வாழ்க.. நம்மிஷ்டமிக்க நல் வேதியற்றேங்கிட விஷ்ட்டு முயிங்களு பத்தி மிகுந்து விளங்கவே யெட்டெழுத்து மினிது தளைக்கவே. அறந்தளைக்க அரியடியாற் மிகவும் சிறந்த நற்றிருவாய் மொழி சீற்பெறவும் நிறைந்து மாரி பொளிந்திடவும் நீனிலம் குறைந்திடாது குணத்தின் விளையவே.

* ஸ்ரீமன் தேவாதி தேவன் தேவ தேவோத்துமன் தேவ சற்புமான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் ஆயிரம் கோடி சூர்ய பிரகாசன் அயோத்தி மீதினில் பங்கை ஆசன செல்வியாருடனே பணியரவ மீதினில் பள்ளி கொண்டவன் அண்டம் பிறக்கும்முன் உதித்தவன் யேக பூதமாய் நின்று அனேக பூதமாய் பிரகாசித்தவன். கல்லை பெண்ணாக்கி காட்சி கொடுத்தவன். யெல்லார்க்கே வல்லவன் இரணியனை இரு பிளவை செய்து ராவணனை வேட்டையாடிய தென் கோம்பை திருநகரில் எழுந்தருளிய திருமலை ராயப் பெருமாள் ஸ்ரீ காரியத்துக்கு கருத்தாரன் சேனாபதி...

* நம் பெரியதாசரான கண்ட நாடு கொண்டு, கொண்ட நாடு கொடாத மண்டலி கற்கண்டன் சொல்லுக்கு அரிச்சந்திரன்... வில்லுக்கு விஜயன்... பரிக்கு நகுலன்... கொடைக்கு கர்ணன்... மல்லுக்கு பீமன்... நவகண்ட பிருதிவுக்கு பிரசண்டன் கேசவிட்ட ராயன் பாண்டி மண்டலப் பிரதீபன் துஷ்ட நிக்கிரக விட்ட பரிபாலணன் அஷ்டதிக்கு அனேகா பயங்கரன்... ராச கம்பிரன் ராசகுல திலகன் கல்வியறிவாகரன் சீர் சிறந்த செங்கோல் சொலுத்தா நின்ற ராச மன்னிய ராச ராச ஸ்ரீ அப்பாச்சி குள்ளப்பக் கவுண்டர் பாப்பய்யக் கவுண்டர்.

* கன்னையக் கவுடர், சிகுத் தேயக் கவுண்டர், மொள்ளையக் கவுண்டர், சக்கணக் கவுண்டர், அப்பாச்சிக் கவுண்டர், அப்பாச்சி குள்ளப்பக் கவுண்டர், பாப்பய்யக் கவுண்டர், தளவாய் அப்பாச்சிக் கவுண்டர், திருமலைசக்கு அப்பாச்சி கவுண்டர், அப்பாச்சிக் குள்ளப்பக் கவுண்டர், துரைச்சாமிக் கவுண்டர்,அப்பாச்சி ராசகுமார் மனு நீதி கோணாமல், சினவேதை தோணாமல் , மாதம் மும்மாரி பெய்ய செங்கோல் செலுத்தி வருகையில் ஸ்வஸ்தி சாலி வாகன சகாப்தம் 1820 வர்த்தமான கலியுகாதி 4000 இதன் மேல் செல்லா நின்ற பரிதாபி வருஷம் வைகாசி மாதம் 8- ம் தேதி செவ்வாய்க் கிழமை பஞ்சமியும் பூச நட்த்திரமும் அமிர்தயோகமும் சிம்ம லக்கினமும்...

* கூடிய சுபயோக தினத்தில் நமக்கும் தமது திருப்பள்ளி தேவிமார்களுக்கும் திருக்கல்யாணம் நடந்து நமது தேவிமார்கள் திருப்பள்ளியறையில் இருத்தி நமது பஞ்சவரி நம்பிரான் தேரில் எழுந்தருளி திரு வீதி திருவலமாக வருகையில் நம் கல்யாண கள்ளத்திரு மன்னனை சேர்ந்த நீரில் மறைகுவற் நினைவில் ஒதுங்குவோம். துறை வழக்கற் சொரூபமான் ஆகுவர். குட்கடம் , கோமளம் ,மரகதம் , மாளுவம் , மச்சம் மகுடம் .

* முதலாகிய தேச சேத்து ராசாக்கள் அவர் அவரது சதுரங்க சேனையுடன் கூடிவந்து திருப்பள்ளியறையில் காவலாக இருந்தவர்களை அடி தண்மால் அடித்து எடுத்துக் கொண்டு போன சொத்துக்களுக்கு விபரம் :

தங்கக்கிரீடம்                5

வெள்ளிக்கிரீடம்        10 

தங்கப்பதக்கம்           10

தங்கச்சாபளி              10 

சக்கரப்பதக்கம்            5

முத்துச்சரம்                  10 

சந்திரப்பிரபை              8 

சூரியபிரபை                  5

குவளை                         10

கொண்டு மணி           10

பாசிப்பந்து                      5

முத்துப்பதக்கம்              5

முத்துக்குடை                 10

மஞ்சப்பட்டு                     5

பச்சைப்பட்டு                  4 

சிவப்புப்பட்டு                 4

வெள்ளைப்பட்டு           8

சரிகைப்பட்டு                10

சடகோபம்                        5

திறந்த கிண்ணம்         8

பவழக்குடை                  10 

அண்டா                           20 

கொப்பரை                     15

டவண்டை                       10

சேகுண்டி                        10

வேட்டி                               15

படாங்கு                            10

சமுதாடு                            10

தூபக்காலம்                      7

சந்தனக்கும்பா               7 

வெள்ளிக்கும்பா            70

குத்துவிளக்கு                 18 

நந்தா விளக்கு                10

சரவிளக்கு                        5

செடி விளக்கு                  8

நாக தீபம்                         5


* இந்தவித ஆடை ஆபரணங்களையெல்லாம் திருப்பள்ளியறையிலிருந்து களவு பொச்சுது என்று அர்ச்சகர் நரசிம்ம அய்யரும் , தானீகர் சுப்பைய்யா நாயக்கரும் , கணக்கு மல்லை பிள்ளையும் , கந்தசாமி செட்டி , சென்ன கிருஷ்ணய்யரும் வந்து சுவாமி காரியத்திற்கு உரியவராகிய மகாராஜ ராஜ ஸ்ரீ அப்பச்சி குள்ளப்பக் கவுண்டர் அவர்கள் சமூகத்தில் தெரியப்படுத்தியதில் காவலாளிகளை வரவழைத்து கஸ்பா முதலாகிய இடங்களிலும் ,விசாரிக்கச் செல்ல உத்தரவு செய்ததில் மேற்படி காவலாளிகள் சகல பூமியும் தேடிப்பார்த்து கள்ளனை பிடித்து வந்து துரையவர்கள் சமூகத்தில் விட்டன்பேரில் களவு முதலுக்கு வகைகளுக்கும் , பொது மேல்படி கள்ளன் வாக்குமூலம்  

கிராம காவல் முத்துச்சாமி  தேவனுக்குப் பாதி , கருப்பத்தேவனுக்குப் பாதி , மாயாண்டித்தேவனுக்குப் பாதி , தேவதாசி அப்பாச்சிக்குப் பாதி கொடுத்தேன் என்று சொல்லத் தெரிந்த சுவாமி , திருவாய் மலர்ந்தருளியபடிக்கு துரையவர்கள் தலையாரிகளை வரவழைத்து கள்ளனை சிரசாசனம் செய்யும்படிக்கு உத்திரவு கொடுத்ததின் பேரில் களவு போன சொத்துக்களுக்கு பிரதியாக அந்தந்த தேசத்தில் ராசாக்கள் ஊதியமாக விட்டுக் கொடுத்த விபரம்.

* உறப்பனை தொழுவுக்கும் , மத்துலூட்டு அழகர் கோவில் மலை உச்சத்திற்கும் , மத்து நாயக்கன் கோட்டை புஞ்சைக்கும்

* இடையன்குளம் வடக்கு கட கொம்புக்கும் , சின்னப்பூங்குடை சாலி மரத்துக்கும் , சங்கராபுரம் எல்லை ஓட்டைக் கணவாய்க்கும் , தெற்கு குச்சனூர் நாட்டுக் கல்லுக்கும் , மார்க்கையன்கோட்டை கூன் அரசுக்கும் , குப்பி செட்டிகுளம் உள்வாய்க்கும் , மேற்கு உத்தமபாளையம் ராவுத்தர் எல்லைக்கும் , கல்லடிச்சான் பாறையில் எழுத்து எழுதியிருக்கிறப் பறக்கும் , கோம்பை அனுமந்தன்பட்டி உத்தமபாளையம் மூணூர் பொது எல்லைக்கும் வடக்கு நான்கு மாலுக்குள் , கஸ்பா உப கிராமம் காலையகவுண்டன்பட்டி , சீலையகவுண்டன்பட்டி ,

 *பண்ணைப்புரம் , மல்லிங்காபுரம் , கரியணம்பட்டி , பல்லவராயன்பட்டி , சிந்தலைச்சேரி , கீழப்பட்டி , மேலப்பட்டி , குரும்பபட்டி , புலிஉத்தி , தொட்டியப்பட்டி , முத்தாலங்குளத்துப்பட்டி , பாலுத்துப்பட்டி , சிக்கச்சியம்மன்பட்டி , கொசவப்பட்டி , நெல்லாச்சேரிபட்டி , சந்தை ஆலப்பட்டி ,வலசைபட்டி , ரெங்கநாதபுரம் , துரைச்சாமிபுரம் , செட்டிகள்பட்டி , குராலிசெல்லிபட்டி ,உபகிராமம் இவ்வளவும் அன்னியில் ,காவல் கிராமம் மார்க்கையன்கோட்டை , உத்தம்பாளையம் , 

*அனுமந்தன்பட்டி , புதுப்பட்டி , கம்பம் , கூடலூர் ஆக காவல் கிராமம் இவ்வளவும் , தாதன் கோம்பை புஞ்சை , பொது கோம்பை புஞ்சை , வாழக்கோம்பை புஞ்சை , கிழவடி புஞ்சை , பனையடிப்பஞ்சை , வானாகட்டி சுரவழி சுங்கம் , எத்திலாப்பட்டி சுரவழி சுங்கம் , இது முதலான நஞ்சை மாவடை , மரவடை , வகையரா நமக்கு மேற்படி ஊதியமாக கொடுத்திருப்பதினாலே நம் கருத்தாரன் அப்பச்சி குள்ளப்ப கவுண்டன் அவர்கள்.

*புத்திர பௌத்திர பரம்பரை வரைக்கும்  ஆச்சந்திரார்களுக்கு காலமெல்லாம் ஆண்டு அனுபவித்து கொண்டு சுகமாக இருப்பாராகவும் , ஏழை சோபனம் , ஏந்தினை சோபனம் , வாழி சோபனம் , மங்கள சோபனம் , அழியான அரக்கனை ஆழியால் தூழியாகத் துகைத்தவன் சோபனம். 

* திருவளரும் தென்கோம்பை நகரம் வாழி

திருமலைராயப் பெருமாள் பாதம் வாழி

மறுமலர் செய்குழலி அலமேலு அங்கு

மலர்ப்பாதம் வாழி.. உயர்வானோர் வாழி

அருமறை அந்தணர் முனிவர் ரிஷிகள் வாழி

அவனிபுகழ் தாசரி குலத்தரசே வாழி

திருவளரும் மணி மார்பன் ராச ராச திருமலை

சக்கப்பாச்சியருமே வாழி

திருமலை அப்பச்சி ராசகுமாருமே வாழி

திருமலைராயப் பெருமாள் திருவடியே சரணம்...


இரண்டு ஓலைச்சுவடிகளில் தனிப்பட்ட குறிப்புகள்

1. செங்கோல் செலுத்தி வருகையில் ஸ்வஸ்தி சாலிவாகன சகாப்தம் 1824 வர்த்தமான கலியுகாதி 5003 அதன் மேல் செல்லா நின்ற பிலவ வருடம் வைகாசி மாதம் 18 - ந் தேதி வெள்ளிக்கிழமையும் , சதுர்தசி திதியும் விசாக நடசத்திரமும் தனுசு லக்கினமும்

2.செங்கோல் செலுத்தி வருகையில் சாலிவாகன சகாப்தம் 1834 கலியுகாதி 5013 அதன் மேல் செல்லா நின்ற விரோதிகருதி வருடம் வைகாசி மாதம் 26- ந் தேதி வியாழக் கிழமையும் , துவாதசியும் சுவாதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் , சிம்ம லக்கினமும். 




No comments:

Post a Comment