ஏத்தமடி இராமக்கல்லு
இறக்கமடி தண்ணிப்பாற
தூரமடி நம்ம கோம்ப
தொடர்ந்து வாடி நடந்து பார்ப்போம்
பட்ட மரம் பாளையமாம்
படர்ந்த மரம் களிமேடு
கும்ம மரம் கோம்பையாம்
குயிலிருந்து கூவுதடி
தவளை குலவையிட
தாமரையோ பூ மலர
தவளைச் சத்தம் கேட்டவுடன் - நீங்க
தள்ளி நடை கொள்ள வேணும்
கல்லுக்கட்டி வில்லை மரம்
கவுரோடி ஆலமரம்
நெல்லுக்கட்டுப் போகுதில்லோ
நீதியுள்ள கோம்பையாம்
தோணுதடி தோணுதடி
தூரந்தொலை தோணுதடி
அன்பான கோம்பையாம்
ஆலமரந் தோணுதடி
மானிருக்கும் மடடப்பாறை
மயிலிருக்கும் சின்ன வாய்க்கால்
தேனீருக்கும் கோம்பையாம்- நீங்க
தேடிவந்தா லாகாதோ
உப்புத்தண்ணி கோட்டையூரு
உவருத்தண்ணி பாளையமமாம்
தேங்காத்தண்ணி கோம்பையாம்-நீங்க
தேடிவந்தா லாகாதோ
ஊரைச்சுத்தி புளியமரம்
உலுப்பிவிட்டா கலகலக்கும்
பேருபோன கோம்பையாம்
பிரளுதில்லோ கலுங்குத்தண்ணி
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நெய் மணக்கும் கத்திரிக்காய்
பூ மணக்கும் கோம்பையாம்
போக மனங்கூடலயோ !
ஏட்டில் எழுதா கவிதைகள்
சே.அன்னகாமு.
இறக்கமடி தண்ணிப்பாற
தூரமடி நம்ம கோம்ப
தொடர்ந்து வாடி நடந்து பார்ப்போம்
பட்ட மரம் பாளையமாம்
படர்ந்த மரம் களிமேடு
கும்ம மரம் கோம்பையாம்
குயிலிருந்து கூவுதடி
தவளை குலவையிட
தாமரையோ பூ மலர
தவளைச் சத்தம் கேட்டவுடன் - நீங்க
தள்ளி நடை கொள்ள வேணும்
கல்லுக்கட்டி வில்லை மரம்
கவுரோடி ஆலமரம்
நெல்லுக்கட்டுப் போகுதில்லோ
நீதியுள்ள கோம்பையாம்
தோணுதடி தோணுதடி
தூரந்தொலை தோணுதடி
அன்பான கோம்பையாம்
ஆலமரந் தோணுதடி
மானிருக்கும் மடடப்பாறை
மயிலிருக்கும் சின்ன வாய்க்கால்
தேனீருக்கும் கோம்பையாம்- நீங்க
தேடிவந்தா லாகாதோ
உப்புத்தண்ணி கோட்டையூரு
உவருத்தண்ணி பாளையமமாம்
தேங்காத்தண்ணி கோம்பையாம்-நீங்க
தேடிவந்தா லாகாதோ
ஊரைச்சுத்தி புளியமரம்
உலுப்பிவிட்டா கலகலக்கும்
பேருபோன கோம்பையாம்
பிரளுதில்லோ கலுங்குத்தண்ணி
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நெய் மணக்கும் கத்திரிக்காய்
பூ மணக்கும் கோம்பையாம்
போக மனங்கூடலயோ !
ஏட்டில் எழுதா கவிதைகள்
சே.அன்னகாமு.
1951