Tuesday, September 17, 2024

 

       கோம்பை வரலாறு



1.அணிந்துரை

2.பதிப்புரை

3.பொருளடக்கம்

4.முன்னுரை

          அத்தியாயம் ஒன்று

    கோம்பையின் தொன்மை

பெருங்கற்காலப் பண்பாடு

கல்வட்டம்

சங்க காலத்தில் கோம்பை

முற்கால பாண்டியர் ஆட்சியில் கோம்பை

சோழர்கள் மற்றும் பிற்கால  பாண்டியர்கள் ஆட்சி

கோம்பையில் பாண்டியர் கால கல்வெட்டு

       அத்தியாயம் இரண்டு

  மதுரையில் விஜயநகர ஆட்சி

தொட்டிய நாயக்கர் பிரிவுகள்

ஹைதர் திப்பு ஆட்சியில் கோம்பை

திண்டுக்கல்லில் ஆங்கிலேயர் ஆட்சி

கம்பம் தாலுகாவும் , பூஞ்ஞார் இராஜாவும்

பூஞ்ஞார் ராஜாவின் காவல் கண்காணிப்பாளர்

       அத்தியாயம் மூன்று

ஆங்கிலேயர் ஆட்சியில் கோம்பை

மதுரை மாவட்டம் உருவாகியது

கோம்பை பாளையம் ஜமீனாக பெயர் மாற்றம்

கோம்பை  ஜமின்தாரின் விழ்ச்சி

கோம்பை ஜமீன்தார் மாலிகானா ஓய்வூதியக்காரர்

விடுதலைப் போரில் கோம்பை

கோம்பைக்கு மகாத்மா  காந்தியின் வருகை

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

கம்பம் பள்ளத்தாக்கில் பிளேக் தொற்றுநோய்

கோம்பை நாய்

         அத்தியாயம் நான்கு

     கோம்பையில் வளர்ச்சி

பதினெட்டாம் கால்வாய் திட்டம்

கோம்பை உள்ளாட்சி அமைப்பு

காவல் நிலையம்

தபால் மற்றும் தந்தி அலுவலகம் 

வங்கித்துறை வளர்ச்சி

தேசியமயமாக்கப்பட்ட வங்கி

கோம்பையில் பள்ளிக்கல்வி நிலையங்கள்

கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகள்

U.C. தொடக்கப்பள்ளி

ரோமன் கத்தோலிக்க தொடக்கப்பள்ளி

ஸ்ரீகன்னிக பரமேஸ்வரி பள்ளி

ஸ்ரீராமன் தொடக்கப்பள்ளி

ஊராட்சி ஒன்றியப்பள்ளி தொடக்கப்பள்ளிகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி,துரைச்சாமிபுரம்.

        அத்தியாயம் ஐந்து

கோம்பை வழிபாட்டுத் தலங்கள்

திருமலைராயப்பெருமாள் கோவில்

கோம்பை கோவில் நுழைவுப் போராட்டம்

நடுகற்கள்

இலக்கியத்தில் சதிகற்கள்

புலிகுத்திப்பட்டான் நடுகல்

யானைகுத்திப்பட்டான் நடுகல்

வாழ்வீரன் நடுகல் 

துப்பாக்கி வீரன் நடுகல் 

சதிக்கல்

மாலையம்மன் நினைவுத்தூண்கள்

கோம்பை முஸ்லிம்கள்

கிறிஸ்துவ மதம்

கத்தோலிக்க கிறிஸ்துவ மதம்

அமெரிக்க மதுரா மிஷன்

அமெரிக்க மிஷன் ஆலயம்

தென்னிந்திய திருச்சபை

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை

கோம்பையில் வலங்கை,இடங்கை சாதி பூசல் ( செப்பு பட்டயச்செய்தி )

முடிவுரை

சான்றுப்பட்டியல்

பின் இணைப்பு












Tuesday, July 9, 2024

 கோம்பை  தேர்திருவிழா

அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி

            விநாயகர் மந்திரம்

ஐந்து கரத்தானை ஆணை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !

            விஷ்ணு மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன் வந்தரையே அமத கலச

கஸ்தாய சர்வாமய வினாசலநாய

திரி லோக்க நாதய 

ஸ்ரீ மகா விஷ்ணுவே நமக !

கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி

பெண் வீட்டார் :

    வழி விடுங்க ... வழி விடுங்க... வழிவிடுங்கன்னா.....

மறைச்சுக்கிட்டு நிற்கிறீங்களே......

எங்க பொண்ணுங்க வர்ராங்க.......

ஏய்! முதலில் வழி விடுங்கையா......

எங்களுக்கு மறைக்காதீங்க .......

விலகுங்க ...விலகுங்க... விலகுங்க...

மாப்பிள்ளை வீட்டார் :

 பொண்ணுங்க வர்ராங்களா ?

எங்கங்க பொண்ணுங்க ?

பெண் வீட்டார்

அந்தா .....ரெண்டு பொண்ணுங்க

சிம்மாசனத்துல அமர்ந்து வராங்கல

அவங்கதான் எங்க பொண்ணுங்க...

மாப்பிள்ளை வீட்டார் :

அப்படியா ? ஆமா ? ரெண்டு பொண்ணுங்க வர்றாங்க ......

பெண் வீட்டார் :

எங்க ? மாப்பிள்ளைய காணும்  !

மாப்பிள்ளை எங்க வர்ராரு .....

எங்க மாப்பிள்ளை ? .......

மாப்பிள்ளை வீட்டார் :

அந்த ! யானை மேல வீரதீரமா

வர்றாருல அவர்தான் எங்க மாப்பிள்ளை

ரெங்கநாதரு.........

பெண் வீட்டார் :

மாப்பிள்ளையா ? என்னங்க சொல்லுறீங்க ......

அங்க யானை மேல தாடி மீசையெல்லாம்

நரைச்சு கூனி குறுகி ஒடுங்கிப்போய் உட்கார்ந்து இருக்காரே....

அவரா ...... உங்க மாப்பிள்ளை ?

(கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு பெண் வீட்டார் மாப்பிள்ளைய அருகில் சென்று பார்த்து வருதல் )

மாப்பிள்ளை வீட்டார்

ஏய்யா.... கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு இருட்டில போய் மாப்பிள்ளைய பார்த்தா .... மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா ?

பெண் வீட்டார் :

அதெல்லாம் நல்லாத் தெரியுது......

நீங்க முதல்ல எங்க பொண்ணுங்கள பாருங்க !

மாப்பிள்ளை வீட்டார் :

ஏங்க ! இவங்களையா ..... பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க... தலையெல்லாம் நரைச்சு கூனு விழுந்து போயி கிழவியா உட்கார்ந்து இருக்காங்களே அவங்களையா பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க ......?

பெண் வீட்டார்

என்ன சொன்னீங்க.....

எங்க பொண்ணுங்கள பார்க்கனுமுன்னா 

ஆள ஒருநாள் பார்க்கனும் !

அழக ஒருநாள் பார்க்கனும் !

இருந்து ஒருநாள் பார்க்கனும் !

விருந்து ஒருநாள் வைக்கனும் !

சும்மாவா ! எங்க பொண்ணுங்கள பத்தி ரொம்ப லேசா சொல்லீட்டீங்க !

மாப்பிள்ளை வீட்டார் :

எங்க மாப்பிள்ளை மட்டும் சும்மாவா ?

எங்க மாப்பிள்ளை எப்படிபட்டவருன்னு தெரியுமா உங்களுக்கு......

பெண் வீட்டார் :

மாப்பிள்ளை பத்தி சொல்லுங்க !

தெரிஞ்சுக்குரம்........

மாப்பிள்ளை வீட்டார் :

தன் வீரத்தை உலகறியச் செய்யுற மாதிரி

யாராலும் அசைக்கக் கூட முடியாத சிவதனுஷை(வில்லை)

ஒரு கையால எடுத்து முறிச்சுப் போட்ட புஜபல பராக்கிரமசாலி எங்க ரங்கநாதரு......இது வீரத்திற்கு அடையாளம் இல்லைங்களா......

பெண் வீட்டார்

அப்படியா.....? எங்க கோதை நாச்சியார்... அதாவது ஆண்டாள் அம்மையார்

எப்படிப்பட்டவங்க தெரியுமா ?

மாப்பிள்ளை வீட்டார் :

எப்படிப்பட்டவங்க .... சொல்லுங்க தெரிஞ்சுக்குரம்....!

பெண் வீட்டார் :

எங்க கோதை பாவை நோன்பு பல வருஷம் இருந்து

கொஞ்சும் தமிழிலே பாடின திருப்பாவையத்தான் ....

மார்கழி மாதம் ஊரெல்லாம் கேட்குது.....

எவ்வளவு பெரிய படிப்பாளி எங்க கோதை ....!

அவங்கள பொண்ணா அடையணுமுன்னா உங்களுக்கு கொடுத்து வைச்சுருக்கனுங்க ...

அவங்க கலை படித்த மகளுங்க.... கலைமகளுங்க....

எங்க ஆண்டாள் பாடிய திருப்பாவை









 



Monday, July 8, 2024

                         கோம்பை


Latest Tamil News

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

 கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு  மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

     கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது

இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஊரின் வட கிழக்கில் உள்ள சால மலை கரட்டின் அடிவாரப் பகுதியில் , விவசாய நிலத்தை சீர் செய்யும் போது பெரும் கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் இருந்தது.

இதில் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பலகை கற்கள் வெளி வந்தன.

முதுமக்கள் தாழியின் கழுத்துப் பகுதியில், கயிறு போன்று வடிவமைப்பு உடைய அலங்கார கோடுகள் இருந்தன.

அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவு உள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருந்தன. இவை தாழிகள் சுடுவதற்கு முன் ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவை ஆகும்.

முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும்.

இங்கு ஈம கலன்களான கலயம், கூஜா, தட்டு, கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய மூடி போன்ற மண் கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்து உள்ளன.

இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் இப்பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் நாகரிகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளது தெரிகிறது. மேலும் ஆய்வு மேற்கொண்டால், பல தொல் தடயங்கள் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.

  தினமலர் செய்தி

    09/07/2024


Sunday, July 7, 2024

 கோம்பையில் பெருங்கற்காலத்தை ச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடுப்பு 

கோம்பை மக்களும் பண்பாடும்

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

 கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு  மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

     கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது. இவ்வூரி்ல் வடகிழக்கில் உள்ள சாலமலை கரட்டின் அடிவாரப் பகுதியில்   விவசாய நிலத்தை சீர்படுத்தும் போது பெருங்கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் ஒன்றிலிருந்து முதுமக்கள் தாழியும் ,உடைந்த பகுதிகள் ,தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பெரிய பலகை கற்கள் ஈம மட்கலங்கள் வெளிவந்தன. முதுமக்கள் தாழியும் கழுத்துப்பகுதியில் கயிறு போன்று வடிவமைப்புடைய அலங்கார கோடுகள் இருந்தன,அலை அலையான அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவுள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருக்கின்றன இவை எல்லாம் தாழிகளை சுடுவதற்கு முன்பு ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவையாகும்.

         முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும். இங்கும் ஈமமட்கலன்களான கலயம்,கூச ,தட்டு , கிண்ணம், தண்ணீர் குவளை மற்றும் சிறு மூடி போற்ற மட்கலங்கள் உடையாமல் முழுவடிவத்துடன் கிடைத்த.துள்ளது.இவற்றில் 14 செ.மீ உயரமுடைய  சிறிய கலயம் என பல்வேறு வடிவம் உயரத்திலும், அகலத்திலும் கிடைத்துள்ளன. இம்மட்கலங்களில் உடல்  பகுதி அகன்றும் வாய் மற்றும் அடிப்பகுதி குறுகிய தோற்ற வடிவில் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன. மட்கலங்களை தரையில் வைப்பதற்கு  பயன்படுத்தப்படும் தாங்கிகள் மட்கலங்களுடன இணைத்தே வட்ட வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இம்மட்கலங்கள் எல்லாம் வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளன. மண்ணிலிருந்து கிடைக்கும் காவி அல்லது சிவப்பு நிற வண்ணத்தை மட்கலன்களை சடுவதற்கு முன்பு பூசப்படுவதால் பார்ப்பதற்கு வழவழப்பான தோற்றத்தை தரும்.

     இங்கு கிடைத்த இப்பொருட்கள் மூலம் இப்பகுதியில் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தய மனிதன் நல்ல நாகரீகம் பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளனர். இவற்றுடன் அம்மக்களின் பண்பட்ட வாழ்வியல் முறைகளையும் நன்கு எடுத்துறைக்கும் வகையில் இம்மட்கலன்கள் உள்ளன. இப்பகுதி பெருங்கற்கள் மக்கள் இனக்குழுவாக வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகவும் அவர்கள் புதைகாடாகவும் இருந்துள்ளது என அறியவருகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்று இன்னும் பல தொல்தடயங்கள் கிடைக்கும் என கோம்பை மக்கள் கூறுகிறார்கள்.

Sunday, June 30, 2024

        

      கோம்பையில் அடுக்கு நிலை நடுகற்கள் 

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

கோம்பை கிராமத்தில் மூன்று அடுக்கு நிலை நடுகற்கள் கிடைத்துள்ளன. இரண்டு அடுக்கு நிலை நடுகற்கள் கோம்பை மேற்கில்  அட்டக்குளம்  இருக்கும் பகுதியிலும் மற்றொன்று கோம்பை கிழக்கு பகுதியிலும் (மாலையடி ) நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட வயற்பகுதியில் கிடைத்துள்ளது.


Saturday, June 29, 2024

         கோம்பை தேர்த்திருவிழா 

           பட்டோலை

(ஓலைச்சுவடி  குறிப்புகள்)

கோம்பை  அருள்மிகு திருமலைராயப் பெருமாள் சுவாமி

விருத்தம்: 

* நல்ல சொற்பொருள் நாள் நடத்தவும் எல்லை காண்டரும் பேரின்பம் எய்தவும் வெல்லும் யானை முகத்தனை மேவி வாழ் வல்லமைக்குரியானை வாழ்த்துவோம், வேக மாடு நரி செரும் விடலை கழும் தாகபோகம் விதா கழ்ச்சியும் சோகவாரியினால் விருதுன்பமும் போக யானை முகத்தனை போற்றுவோம். சீர் தாகு இத் தேசத்தில் திங்கள் மும் மாரி பெய்ய மனங்களில் கஷ்டம் கலைந்திட யாரும் வாழ்க அறங்கள் தளைத்திட பாரில் இவ்வூறை பாடலுற்ற மறோ. 

* வட்டமுள்ள கடற்புவி வாழ்க.. நம்மிஷ்டமிக்க நல் வேதியற்றேங்கிட விஷ்ட்டு முயிங்களு பத்தி மிகுந்து விளங்கவே யெட்டெழுத்து மினிது தளைக்கவே. அறந்தளைக்க அரியடியாற் மிகவும் சிறந்த நற்றிருவாய் மொழி சீற்பெறவும் நிறைந்து மாரி பொளிந்திடவும் நீனிலம் குறைந்திடாது குணத்தின் விளையவே.

* ஸ்ரீமன் தேவாதி தேவன் தேவ தேவோத்துமன் தேவ சற்புமான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் ஆயிரம் கோடி சூர்ய பிரகாசன் அயோத்தி மீதினில் பங்கை ஆசன செல்வியாருடனே பணியரவ மீதினில் பள்ளி கொண்டவன் அண்டம் பிறக்கும்முன் உதித்தவன் யேக பூதமாய் நின்று அனேக பூதமாய் பிரகாசித்தவன். கல்லை பெண்ணாக்கி காட்சி கொடுத்தவன். யெல்லார்க்கே வல்லவன் இரணியனை இரு பிளவை செய்து ராவணனை வேட்டையாடிய தென் கோம்பை திருநகரில் எழுந்தருளிய திருமலை ராயப் பெருமாள் ஸ்ரீ காரியத்துக்கு கருத்தாரன் சேனாபதி...

* நம் பெரியதாசரான கண்ட நாடு கொண்டு, கொண்ட நாடு கொடாத மண்டலி கற்கண்டன் சொல்லுக்கு அரிச்சந்திரன்... வில்லுக்கு விஜயன்... பரிக்கு நகுலன்... கொடைக்கு கர்ணன்... மல்லுக்கு பீமன்... நவகண்ட பிருதிவுக்கு பிரசண்டன் கேசவிட்ட ராயன் பாண்டி மண்டலப் பிரதீபன் துஷ்ட நிக்கிரக விட்ட பரிபாலணன் அஷ்டதிக்கு அனேகா பயங்கரன்... ராச கம்பிரன் ராசகுல திலகன் கல்வியறிவாகரன் சீர் சிறந்த செங்கோல் சொலுத்தா நின்ற ராச மன்னிய ராச ராச ஸ்ரீ அப்பாச்சி குள்ளப்பக் கவுண்டர் பாப்பய்யக் கவுண்டர்.

* கன்னையக் கவுடர், சிகுத் தேயக் கவுண்டர், மொள்ளையக் கவுண்டர், சக்கணக் கவுண்டர், அப்பாச்சிக் கவுண்டர், அப்பாச்சி குள்ளப்பக் கவுண்டர், பாப்பய்யக் கவுண்டர், தளவாய் அப்பாச்சிக் கவுண்டர், திருமலைசக்கு அப்பாச்சி கவுண்டர், அப்பாச்சிக் குள்ளப்பக் கவுண்டர், துரைச்சாமிக் கவுண்டர்,அப்பாச்சி ராசகுமார் மனு நீதி கோணாமல், சினவேதை தோணாமல் , மாதம் மும்மாரி பெய்ய செங்கோல் செலுத்தி வருகையில் ஸ்வஸ்தி சாலி வாகன சகாப்தம் 1820 வர்த்தமான கலியுகாதி 4000 இதன் மேல் செல்லா நின்ற பரிதாபி வருஷம் வைகாசி மாதம் 8- ம் தேதி செவ்வாய்க் கிழமை பஞ்சமியும் பூச நட்த்திரமும் அமிர்தயோகமும் சிம்ம லக்கினமும்...

* கூடிய சுபயோக தினத்தில் நமக்கும் தமது திருப்பள்ளி தேவிமார்களுக்கும் திருக்கல்யாணம் நடந்து நமது தேவிமார்கள் திருப்பள்ளியறையில் இருத்தி நமது பஞ்சவரி நம்பிரான் தேரில் எழுந்தருளி திரு வீதி திருவலமாக வருகையில் நம் கல்யாண கள்ளத்திரு மன்னனை சேர்ந்த நீரில் மறைகுவற் நினைவில் ஒதுங்குவோம். துறை வழக்கற் சொரூபமான் ஆகுவர். குட்கடம் , கோமளம் ,மரகதம் , மாளுவம் , மச்சம் மகுடம் .

* முதலாகிய தேச சேத்து ராசாக்கள் அவர் அவரது சதுரங்க சேனையுடன் கூடிவந்து திருப்பள்ளியறையில் காவலாக இருந்தவர்களை அடி தண்மால் அடித்து எடுத்துக் கொண்டு போன சொத்துக்களுக்கு விபரம் :

தங்கக்கிரீடம்                5

வெள்ளிக்கிரீடம்        10 

தங்கப்பதக்கம்           10

தங்கச்சாபளி              10 

சக்கரப்பதக்கம்            5

முத்துச்சரம்                  10 

சந்திரப்பிரபை              8 

சூரியபிரபை                  5

குவளை                         10

கொண்டு மணி           10

பாசிப்பந்து                      5

முத்துப்பதக்கம்              5

முத்துக்குடை                 10

மஞ்சப்பட்டு                     5

பச்சைப்பட்டு                  4 

சிவப்புப்பட்டு                 4

வெள்ளைப்பட்டு           8

சரிகைப்பட்டு                10

சடகோபம்                        5

திறந்த கிண்ணம்         8

பவழக்குடை                  10 

அண்டா                           20 

கொப்பரை                     15

டவண்டை                       10

சேகுண்டி                        10

வேட்டி                               15

படாங்கு                            10

சமுதாடு                            10

தூபக்காலம்                      7

சந்தனக்கும்பா               7 

வெள்ளிக்கும்பா            70

குத்துவிளக்கு                 18 

நந்தா விளக்கு                10

சரவிளக்கு                        5

செடி விளக்கு                  8

நாக தீபம்                         5


* இந்தவித ஆடை ஆபரணங்களையெல்லாம் திருப்பள்ளியறையிலிருந்து களவு பொச்சுது என்று அர்ச்சகர் நரசிம்ம அய்யரும் , தானீகர் சுப்பைய்யா நாயக்கரும் , கணக்கு மல்லை பிள்ளையும் , கந்தசாமி செட்டி , சென்ன கிருஷ்ணய்யரும் வந்து சுவாமி காரியத்திற்கு உரியவராகிய மகாராஜ ராஜ ஸ்ரீ அப்பச்சி குள்ளப்பக் கவுண்டர் அவர்கள் சமூகத்தில் தெரியப்படுத்தியதில் காவலாளிகளை வரவழைத்து கஸ்பா முதலாகிய இடங்களிலும் ,விசாரிக்கச் செல்ல உத்தரவு செய்ததில் மேற்படி காவலாளிகள் சகல பூமியும் தேடிப்பார்த்து கள்ளனை பிடித்து வந்து துரையவர்கள் சமூகத்தில் விட்டன்பேரில் களவு முதலுக்கு வகைகளுக்கும் , பொது மேல்படி கள்ளன் வாக்குமூலம்  

கிராம காவல் முத்துச்சாமி  தேவனுக்குப் பாதி , கருப்பத்தேவனுக்குப் பாதி , மாயாண்டித்தேவனுக்குப் பாதி , தேவதாசி அப்பாச்சிக்குப் பாதி கொடுத்தேன் என்று சொல்லத் தெரிந்த சுவாமி , திருவாய் மலர்ந்தருளியபடிக்கு துரையவர்கள் தலையாரிகளை வரவழைத்து கள்ளனை சிரசாசனம் செய்யும்படிக்கு உத்திரவு கொடுத்ததின் பேரில் களவு போன சொத்துக்களுக்கு பிரதியாக அந்தந்த தேசத்தில் ராசாக்கள் ஊதியமாக விட்டுக் கொடுத்த விபரம்.

* உறப்பனை தொழுவுக்கும் , மத்துலூட்டு அழகர் கோவில் மலை உச்சத்திற்கும் , மத்து நாயக்கன் கோட்டை புஞ்சைக்கும்

* இடையன்குளம் வடக்கு கட கொம்புக்கும் , சின்னப்பூங்குடை சாலி மரத்துக்கும் , சங்கராபுரம் எல்லை ஓட்டைக் கணவாய்க்கும் , தெற்கு குச்சனூர் நாட்டுக் கல்லுக்கும் , மார்க்கையன்கோட்டை கூன் அரசுக்கும் , குப்பி செட்டிகுளம் உள்வாய்க்கும் , மேற்கு உத்தமபாளையம் ராவுத்தர் எல்லைக்கும் , கல்லடிச்சான் பாறையில் எழுத்து எழுதியிருக்கிறப் பறக்கும் , கோம்பை அனுமந்தன்பட்டி உத்தமபாளையம் மூணூர் பொது எல்லைக்கும் வடக்கு நான்கு மாலுக்குள் , கஸ்பா உப கிராமம் காலையகவுண்டன்பட்டி , சீலையகவுண்டன்பட்டி ,

 *பண்ணைப்புரம் , மல்லிங்காபுரம் , கரியணம்பட்டி , பல்லவராயன்பட்டி , சிந்தலைச்சேரி , கீழப்பட்டி , மேலப்பட்டி , குரும்பபட்டி , புலிஉத்தி , தொட்டியப்பட்டி , முத்தாலங்குளத்துப்பட்டி , பாலுத்துப்பட்டி , சிக்கச்சியம்மன்பட்டி , கொசவப்பட்டி , நெல்லாச்சேரிபட்டி , சந்தை ஆலப்பட்டி ,வலசைபட்டி , ரெங்கநாதபுரம் , துரைச்சாமிபுரம் , செட்டிகள்பட்டி , குராலிசெல்லிபட்டி ,உபகிராமம் இவ்வளவும் அன்னியில் ,காவல் கிராமம் மார்க்கையன்கோட்டை , உத்தம்பாளையம் , 

*அனுமந்தன்பட்டி , புதுப்பட்டி , கம்பம் , கூடலூர் ஆக காவல் கிராமம் இவ்வளவும் , தாதன் கோம்பை புஞ்சை , பொது கோம்பை புஞ்சை , வாழக்கோம்பை புஞ்சை , கிழவடி புஞ்சை , பனையடிப்பஞ்சை , வானாகட்டி சுரவழி சுங்கம் , எத்திலாப்பட்டி சுரவழி சுங்கம் , இது முதலான நஞ்சை மாவடை , மரவடை , வகையரா நமக்கு மேற்படி ஊதியமாக கொடுத்திருப்பதினாலே நம் கருத்தாரன் அப்பச்சி குள்ளப்ப கவுண்டன் அவர்கள்.

*புத்திர பௌத்திர பரம்பரை வரைக்கும்  ஆச்சந்திரார்களுக்கு காலமெல்லாம் ஆண்டு அனுபவித்து கொண்டு சுகமாக இருப்பாராகவும் , ஏழை சோபனம் , ஏந்தினை சோபனம் , வாழி சோபனம் , மங்கள சோபனம் , அழியான அரக்கனை ஆழியால் தூழியாகத் துகைத்தவன் சோபனம். 

* திருவளரும் தென்கோம்பை நகரம் வாழி

திருமலைராயப் பெருமாள் பாதம் வாழி

மறுமலர் செய்குழலி அலமேலு அங்கு

மலர்ப்பாதம் வாழி.. உயர்வானோர் வாழி

அருமறை அந்தணர் முனிவர் ரிஷிகள் வாழி

அவனிபுகழ் தாசரி குலத்தரசே வாழி

திருவளரும் மணி மார்பன் ராச ராச திருமலை

சக்கப்பாச்சியருமே வாழி

திருமலை அப்பச்சி ராசகுமாருமே வாழி

திருமலைராயப் பெருமாள் திருவடியே சரணம்...


இரண்டு ஓலைச்சுவடிகளில் தனிப்பட்ட குறிப்புகள்

1. செங்கோல் செலுத்தி வருகையில் ஸ்வஸ்தி சாலிவாகன சகாப்தம் 1824 வர்த்தமான கலியுகாதி 5003 அதன் மேல் செல்லா நின்ற பிலவ வருடம் வைகாசி மாதம் 18 - ந் தேதி வெள்ளிக்கிழமையும் , சதுர்தசி திதியும் விசாக நடசத்திரமும் தனுசு லக்கினமும்

2.செங்கோல் செலுத்தி வருகையில் சாலிவாகன சகாப்தம் 1834 கலியுகாதி 5013 அதன் மேல் செல்லா நின்ற விரோதிகருதி வருடம் வைகாசி மாதம் 26- ந் தேதி வியாழக் கிழமையும் , துவாதசியும் சுவாதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் , சிம்ம லக்கினமும். 




Friday, June 28, 2024

               கோம்பை

கோம்பை என்பதோர் ஊரின் பெயர்.ஊரின் பெயர் எனும்போது,அம்பாசமுத்திரம் அம்பை ஆகியது போல என்று எண்ணலாகாது.கோம்பை என்பதே முழுப்பெயர்தான்

   ஊர்களின் பெயர்களுக்குப் பெரும்பாலும் துல்லியமானதோர் வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த காரணம் இருக்கும். அல்லது இடுகுறிப் பெயராக இருக்க வேண்டும். அதைச் சுருக்கி விளிக்கம் போது, பெயர் அதன் தன்மையை இழந்து, இளித்துக்கொண்டு நிற்பது அடாது. எடுத்துக்காட்டாக, சிராப்பள்ளி என்று பெயர் வரக்காரணம் உண்டு. அஃது திரு எனும் சிறப்பு அடைமொழி பெற்றுத் திருச்சிராப்பள்ளி ஆகியது. அதைத் திருச்சி என குறுக்கும்போது பொருளற்ற முண்டமாக நிற்பது அருவருப்பாக இல்லையா ? ஆனால் கோம்பை அவ்வாறல்ல.

        இந்திய தேசீய நாய்களில் ராஜபாளையமும்,கோம்பையும் பெயர் பெற்றவை. இடத்தின் பெயர் நாய்க்கும் ஆனது எனில் தமிழ் இலக்கணத்தின்படி அது இடஆகு பெயர்.

          கோம்பை என்பது ஊர்ப்பெயர் என்பது போல், நாய் இனத்தின் பெயர் என்பது போல், அஃதோர் ஆடவப் பெயரும் ஆகும். சாதி, இனப் பாகுபாடுகள் துறந்து அந்தப் பகுதி மக்கள் அப்பெயரை அணிந்து வாழ்ந்தனர்.

      இனி, உங்களில் சிலர், கோம்பை எங்கிருக்கிறது எனும் கேள்வி எழுப்புவது குறித்து: தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில் ,உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

        கோபம்,ஆத்திரம் வரும்போதும் இளக்காரமாகவும் " அவன் என்ன பெரிய கோம்பையா ?" என வினவுவதுண்டு. அது கோம்பை எனும் கோபம் மிகுந்த  நாயைக் குறித்தும் இருக்கலாம். கோம்பை எனும் பெயரில் ஒரு சித்தன் வாழ்ந்து சமாதி அடைந்த்தற்கு அடையாளமாக, ஈத்தாமொழி ராஜாமங்கலம் துறை கடற்கரையில் அமைந்துள்ளது (நாகர்கோவில்) அருகில் இன்றும் மக்கள் வழிபடும் (கோம்பேஸ்வரர் ஆலயம் )கோம்பைச்சாமி மடம் ஒன்றுள்ளது கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையோரம். முழுநிலா அன்று கூட்டமாகக் கிடக்கும். ஆண்டில் ஒரு நாள் குருபூஜ உண்டு.விடுமுறை நாட்களில் வில்வண்டி ,சக்கடா வண்டி,கூட்டு வண்டி பூட்டிக் கொண்டு போய், கொல்லா மரக் காடுகளுக்கு ஊடாகப் போகும் வண்டித்தடத்தில் பைதாக்கள் மணலில் புதைய நகரந்து, தென்னந்தோப்பின் நடுவில் இருக்கும் கோம்பைச் சாமி மடத்தை அடைந்து, வண்டியை அவிழ்த்து, அடுப்புக் கூட்டி, விறகு தேடி, சுனையில் தண்ணீர்  கோரி, பொங்கிச்  சாப்பிட்டு வருவார்கள். கோம்பைச் சாமியின் மடத்தில் நின்றால் கடல் அலை அடிப்பது கேட்கும்.

        கோம்பைச் சாமியின் பெயரால் அந்தப் பக்கம் கோம்பை எனும் பெயர் அதிகமாக வழங்கி வந்திருக்கலாம்.

கோம்பை சுவாமிகள் பற்றி அரிய: 

https://www.maalaimalar.com/news/district/2022/02/23143519/3514771/Kanyakumari-News97th-Guru-poojai-of-Eethaamozhi-Shri.vpf


 

 கோம்பை சார்ந்த பதிவுகள்

கனத்த இரவு கண்ணீரில்          நனைந்தது

கோம்பையில் கடலைப் பம்பல்;

தூரத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம்

பிள்ளைகுட்டிகளை இழுத்துக் கொண்டு

குடும்பங் குடும்பமாய்

வந்து சேர்வர் கூலிச்சனங்கள்-

கேப்பைச் சூட்டினை நோக்கிவரும்

எலிகளைப் போல

மந்தைப் புளிய மரங்களுக்கடியில்

இடிந்து கிடக்கும் திண்ணைகளில்

சாவடிப் படிகளில்

மூட்டை முடிச்சுகளுடன் கிடைபோடுவர்

பருவகாலப் புட்களைப் போல

ஓடையில் கல்லெடுத்து

வீதிகளில் அடுப்புக் கூட்டி

இரவெல்லாம் சமைப்பர்;

சுற்றிச் சட்டிகளைத் துடைத்து

தலையில் வைத்துக்கொண்டு

காடுகளுக்குக் கிளம்புவர்

பெருகிப் பொங்கும் சுனைநீர் போல

வேட்டு வைத்து உடைத்த பாறைகளைப் போல

துருத்திக் கொண்டிருக்கும் சுக்கான் பாதைகளில்

அரைத் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளை அடித்திழுத்துக் கொண்டு

ஆட்கள் போகும்வழியே ஓடுவர்

அம்புகளைப் போல

காட்டில் கால் வைக்கும் போது

கிழக்கே சாலைமலைக்குப் பின்னால்

சன்னமாய் விலகும் இருள் -

தூக்கத்தில் முறுவலிக்கும் 

குழந்தையின் உதடுபோல்

காட்டு ஓடையில் ஒதுங்கிக்

கள்ளி மரத்தடி மண்ணில் பல் துலக்கி

ஒருசேரத் தண்ணிரீல் கொப்பளித்து

முகம் தடவி

ஓடி ஓடிச் செடி பிடுங்குவர்

கிளித்தட்டு விளையாடும் சிறுமிகள் போல

வாயலுங்காமல் பருப்புகளைத் தின்பர்

பிஞ்சுகளை மென்று தாகம் தணிப்பர்.

ஆய்ந்த கடலையை அளந்து போட்டுக்

கூலி வாங்கி வழிகூடுவர்

தங்குமிடம் நோக்கி.


இரவெல்லாம் சோறாக்கி

மீண்டும் காடு ஏகுவர்.


செக்கு மாடுகள் இந்த ஜீவன்கள்?

தரும் புழுதியில் விழுந்து கிடக்கிறார்களே

வெட்டிப் போட்ட கட்டைகள் போல

வீசி எறிந்த கொட்டைகள் போலச்

செக்கு மாடுகள் இந்த ஜீவன்கள்?


இப்படித்தான்

முகம் பாரா பூம்பிஞ்சையும்

சவலப் பிள்ளையையும் சுமந்துகொண்டு

மாரியப்பனும் காளியம்மையும்

கடலைப் பம்மலுக்கு வந்தனர்-


தேய்ந்து அறிந்து

பாரக் கயிறுபோல அவன்...

நைந்து கிழிந்த 

பழைய சேலைபோல் அவள்...

வறுமை எழுதிய சித்திரங்களாய்

நால்வரும்....


புகையிலைக் கூளத்தை ஒதுக்கியபடியே

செடி சேர்த்துக் குவித்தான் மாரியப்பன்...

பச்சைப் பருப்பைத் தின்னும் சவலையைக்

கிள்ளி,அடித்து,தள்ளிவிட்டு,

திட்டிக்கொண்டே

கடலையை ஆய்ந்தாள் காளியம்மை

மடிக்குள் உறங்கியது பூம்பிஞ்சு


அது விழிக்கவே இல்லை என்பதைத்

திரும்பி வரும்போதே உணர்ந்தாள்.


உடன் வேலைக்காரர்கள் முன்னே போய்விட

துணையில்லா அந்த இரவில்

ஓடைக்கரையின் செம்மண்மேட்டில்

மாரியப்பன் குழிவெட்டினான்

உயிரைப் பிடுங்கிப் போட்டதுபோல

பூம்பிஞ்சை இட்டாள் காளியம்மை

மண்ணைத் தள்ளி மெத்திக்கொண்டே

வாய்விட்டழுதனர் மூவரும்


விராலிச் செடியும்

வீசும் காற்றையும் தவிர

வேறு எவரும் அங்கில்லை.

கனத்த இரவு அவர்தம்

கண்ணீரால் நனைந்தது.