Sunday, July 7, 2024

 கோம்பையில் பெருங்கற்காலத்தை ச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடுப்பு 

கோம்பை மக்களும் பண்பாடும்

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

 கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு  மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

     கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது. இவ்வூரி்ல் வடகிழக்கில் உள்ள சாலமலை கரட்டின் அடிவாரப் பகுதியில்   விவசாய நிலத்தை சீர்படுத்தும் போது பெருங்கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் ஒன்றிலிருந்து முதுமக்கள் தாழியும் ,உடைந்த பகுதிகள் ,தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பெரிய பலகை கற்கள் ஈம மட்கலங்கள் வெளிவந்தன. முதுமக்கள் தாழியும் கழுத்துப்பகுதியில் கயிறு போன்று வடிவமைப்புடைய அலங்கார கோடுகள் இருந்தன,அலை அலையான அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவுள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருக்கின்றன இவை எல்லாம் தாழிகளை சுடுவதற்கு முன்பு ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவையாகும்.

         முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும். இங்கும் ஈமமட்கலன்களான கலயம்,கூச ,தட்டு , கிண்ணம், தண்ணீர் குவளை மற்றும் சிறு மூடி போற்ற மட்கலங்கள் உடையாமல் முழுவடிவத்துடன் கிடைத்த.துள்ளது.இவற்றில் 14 செ.மீ உயரமுடைய  சிறிய கலயம் என பல்வேறு வடிவம் உயரத்திலும், அகலத்திலும் கிடைத்துள்ளன. இம்மட்கலங்களில் உடல்  பகுதி அகன்றும் வாய் மற்றும் அடிப்பகுதி குறுகிய தோற்ற வடிவில் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன. மட்கலங்களை தரையில் வைப்பதற்கு  பயன்படுத்தப்படும் தாங்கிகள் மட்கலங்களுடன இணைத்தே வட்ட வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இம்மட்கலங்கள் எல்லாம் வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளன. மண்ணிலிருந்து கிடைக்கும் காவி அல்லது சிவப்பு நிற வண்ணத்தை மட்கலன்களை சடுவதற்கு முன்பு பூசப்படுவதால் பார்ப்பதற்கு வழவழப்பான தோற்றத்தை தரும்.

     இங்கு கிடைத்த இப்பொருட்கள் மூலம் இப்பகுதியில் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தய மனிதன் நல்ல நாகரீகம் பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளனர். இவற்றுடன் அம்மக்களின் பண்பட்ட வாழ்வியல் முறைகளையும் நன்கு எடுத்துறைக்கும் வகையில் இம்மட்கலன்கள் உள்ளன. இப்பகுதி பெருங்கற்கள் மக்கள் இனக்குழுவாக வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகவும் அவர்கள் புதைகாடாகவும் இருந்துள்ளது என அறியவருகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்று இன்னும் பல தொல்தடயங்கள் கிடைக்கும் என கோம்பை மக்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment