கோம்பை

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.
கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது
இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஊரின் வட கிழக்கில் உள்ள சால மலை கரட்டின் அடிவாரப் பகுதியில் , விவசாய நிலத்தை சீர் செய்யும் போது பெரும் கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் இருந்தது.
இதில் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பலகை கற்கள் வெளி வந்தன.
முதுமக்கள் தாழியின் கழுத்துப் பகுதியில், கயிறு போன்று வடிவமைப்பு உடைய அலங்கார கோடுகள் இருந்தன.
அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவு உள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருந்தன. இவை தாழிகள் சுடுவதற்கு முன் ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவை ஆகும்.
முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும்.
இங்கு ஈம கலன்களான கலயம், கூஜா, தட்டு, கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய மூடி போன்ற மண் கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்து உள்ளன.
இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் இப்பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் நாகரிகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளது தெரிகிறது. மேலும் ஆய்வு மேற்கொண்டால், பல தொல் தடயங்கள் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.
தினமலர் செய்தி
09/07/2024
No comments:
Post a Comment