Monday, October 10, 2011

கோம்பை-தேர்ப்பாடல்

தங்கும் திருமலைவனமே-என்
ரங்கநாதர் சன்னதிக்கு வருஞ்சனமே!
-தங்கும்
1ம் திருவிழாவாம் அன்னமயில் வாகனமாம் -(தேவாங்கர்)
அன்னமயில் மீதிலேறி ஆடி விளையாடி வாரார்
-தங்கும்
2ம் திருவிழாவாம் சிங்கக்குட்டி வாகனமாம் -(கோனார்)
சிங்கக்குட்டி மீதிலேறி சிரிச்சு விளையாடி வாரார்
-தங்கும்
3ம் திருவிழாவாம் ஆஞ்சநேயர் வாகனமாம் -(ஆசாரியார்)
ஆஞ்சநேயர் மீதிலேறி சாய்ந்து விளையாடி வாரார்
-தங்கும்
4ம் திருவிழாவாம் இரதம்போல ஜோடனையாம் -(சோழியச்செட்டியார்)
கருட தரிசனமாம் கச்சிதமான கோம்பைத்தேரு
-தங்கும்
5ம் திருவிழாவாம் அஞ்சுதலை வாகனமாம் -(பிள்ளைமார்)
அஞ்சுதலை நாகமேறி ஆடி விளையாடி வாரார்
-தங்கும்
6ம் திருவிழாவாம் யானைமேலே ஊர்வலமாம் -(குயவர்)
யானைமேலே ஏறிக்கிட்டு பொண்ணு கேட்டு வாராராம்
-தங்கும்
7ம் திருவிழாவாம் ஏறும்பச்சை குதிரைகளாம் -(ஆரியவைசியர்)
பச்சைகுதிரை மேலஏறி பாய்ஞ்சு விளையாடி வாரார்
-தங்கும்
8ம் திருவிழாவாம் வெட்டும்பரி வாகனமாம் -(கவுண்டர்)
எட்டுமணி நேரத்துல பட்டோலை வாசிப்பாராம்
-தங்கும்
9ம் திருவிழாவாம் ஓங்கும்யாளி வாகனமாம் -(நாடார்)
ஓங்கும்யாளி மேலஏறி மாலைபோட்டு வாராராம்
-தங்கும்
ஆறு வண்டி நூறுசட்டம் அழகான கோம்பைத் 
தேர் இழுக்க மணிகுலுங்க தேசத்தாரு கைதொழுக - தங்கும்
மலையே மலை பொருதி மாந்தோப்பு ஓரம்வந்து 
சிலையாக முளைத்தவராம் செல்வம் உள்ள ரங்கநாதர் - தங்கும்
யாராரு தொட்டாலும் அசையாத கோம்பைத்தேரு
நடுச்சாமி தொட்டவுடன் நாலுமுழம் ஓடிவரும் - தங்கும் 
வெள்ளி விளக்கெரிய வெங்கலங்கள் ஓசையிட
தங்க விளக்கெரியும் ரங்கநாதர் சன்னதியிலே - தங்கும்
மேற்கே ஆலமரம் மேனியெல்லாம் தங்கநிறம் 
தங்கநிற ரங்கநாதர் சன்னதிக்கு வாருங்களே - தங்கும்
நேரான ராமக்கல்லு நின்னு சிலை ஓடுது பாரு
ஜோரான மான்வந்து துள்ளிவிளையாடுது பாரு- தங்கும்
சுற்றிப் புளியமரம் சூதாடும் வேப்பமரம்
ஜம்பப் புளியமரம் அது சடையாண்டி நிற்கும் மரம் - தங்கும்
இலுமிச்சம் பாச்சு வெட்டி இருபுறமும் சோலைகட்டி
சோலைக்கு நடுவினிலே சுதந்தரமாய் ஆடிவாரார் - தங்கும்

அ.சுருளியாண்டி பாவலர்
கோம்பை