கோம்பை தேர்திருவிழா
அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி
விநாயகர் மந்திரம்
ஐந்து கரத்தானை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !
விஷ்ணு மந்திரம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன் வந்தரையே அமத கலச
கஸ்தாய சர்வாமய வினாசலநாய
திரி லோக்க நாதய
ஸ்ரீ மகா விஷ்ணுவே நமக !
கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி
பெண் வீட்டார் :
வழி விடுங்க ... வழி விடுங்க... வழிவிடுங்கன்னா.....
மறைச்சுக்கிட்டு நிற்கிறீங்களே......
எங்க பொண்ணுங்க வர்ராங்க.......
ஏய்! முதலில் வழி விடுங்கையா......
எங்களுக்கு மறைக்காதீங்க .......
விலகுங்க ...விலகுங்க... விலகுங்க...
மாப்பிள்ளை வீட்டார் :
பொண்ணுங்க வர்ராங்களா ?
எங்கங்க பொண்ணுங்க ?
பெண் வீட்டார் :
அந்தா .....ரெண்டு பொண்ணுங்க
சிம்மாசனத்துல அமர்ந்து வராங்கல
அவங்கதான் எங்க பொண்ணுங்க...
மாப்பிள்ளை வீட்டார் :
அப்படியா ? ஆமா ? ரெண்டு பொண்ணுங்க வர்றாங்க ......
பெண் வீட்டார் :
எங்க ? மாப்பிள்ளைய காணும் !
மாப்பிள்ளை எங்க வர்ராரு .....
எங்க மாப்பிள்ளை ? .......
மாப்பிள்ளை வீட்டார் :
அந்த ! யானை மேல வீரதீரமா
வர்றாருல அவர்தான் எங்க மாப்பிள்ளை
ரெங்கநாதரு.........
பெண் வீட்டார் :
மாப்பிள்ளையா ? என்னங்க சொல்லுறீங்க ......
அங்க யானை மேல தாடி மீசையெல்லாம்
நரைச்சு கூனி குறுகி ஒடுங்கிப்போய் உட்கார்ந்து இருக்காரே....
அவரா ...... உங்க மாப்பிள்ளை ?
(கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு பெண் வீட்டார் மாப்பிள்ளைய அருகில் சென்று பார்த்து வருதல் )
மாப்பிள்ளை வீட்டார் :
ஏய்யா.... கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு இருட்டில போய் மாப்பிள்ளைய பார்த்தா .... மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா ?
பெண் வீட்டார் :
அதெல்லாம் நல்லாத் தெரியுது......
நீங்க முதல்ல எங்க பொண்ணுங்கள பாருங்க !
மாப்பிள்ளை வீட்டார் :
ஏங்க ! இவங்களையா ..... பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க... தலையெல்லாம் நரைச்சு கூனு விழுந்து போயி கிழவியா உட்கார்ந்து இருக்காங்களே அவங்களையா பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க ......?
பெண் வீட்டார்:
என்ன சொன்னீங்க.....
எங்க பொண்ணுங்கள பார்க்கனுமுன்னா
ஆள ஒருநாள் பார்க்கனும் !
அழக ஒருநாள் பார்க்கனும் !
இருந்து ஒருநாள் பார்க்கனும் !
விருந்து ஒருநாள் வைக்கனும் !
சும்மாவா ! எங்க பொண்ணுங்கள பத்தி ரொம்ப லேசா சொல்லீட்டீங்க !
மாப்பிள்ளை வீட்டார் :
எங்க மாப்பிள்ளை மட்டும் சும்மாவா ?
எங்க மாப்பிள்ளை எப்படிபட்டவருன்னு தெரியுமா உங்களுக்கு......
பெண் வீட்டார் :
மாப்பிள்ளை பத்தி சொல்லுங்க !
தெரிஞ்சுக்குரம்........
மாப்பிள்ளை வீட்டார் :
தன் வீரத்தை உலகறியச் செய்யுற மாதிரி
யாராலும் அசைக்கக் கூட முடியாத சிவதனுஷை(வில்லை)
ஒரு கையால எடுத்து முறிச்சுப் போட்ட புஜபல பராக்கிரமசாலி எங்க ரங்கநாதரு......இது வீரத்திற்கு அடையாளம் இல்லைங்களா......
பெண் வீட்டார் :
அப்படியா.....? எங்க கோதை நாச்சியார்... அதாவது ஆண்டாள் அம்மையார்
எப்படிப்பட்டவங்க தெரியுமா ?
மாப்பிள்ளை வீட்டார் :
எப்படிப்பட்டவங்க .... சொல்லுங்க தெரிஞ்சுக்குரம்....!
பெண் வீட்டார் :
எங்க கோதை பாவை நோன்பு பல வருஷம் இருந்து
கொஞ்சும் தமிழிலே பாடின திருப்பாவையத்தான் ....
மார்கழி மாதம் ஊரெல்லாம் கேட்குது.....
எவ்வளவு பெரிய படிப்பாளி எங்க கோதை ....!
அவங்கள பொண்ணா அடையணுமுன்னா உங்களுக்கு கொடுத்து வைச்சுருக்கனுங்க ...
அவங்க கலை படித்த மகளுங்க.... கலைமகளுங்க....
எங்க ஆண்டாள் பாடிய திருப்பாவை
