கோம்பை சார்ந்த கவிதைகள்
கருகிப் போகுமோ
வடக்கிருந்து மழை வந்தால்
போடிமலை தடுக்கும்
கிழக்கிருந்து மழை வந்தால்
சாலைமலை தடுக்கும்
தெற்கிருந்து மழை வந்தால்
பன்றிமலை தடுக்கும்
மேற்கிருந்து மழை வந்தால்
கோட்டைமலை தடுக்கும்
சுற்றிச் சுற்றி மழை பொழியும்
கோம்பைக்கு அது இல்லை
காற்று
எற்றி எற்றி முகிலுருட்டும்
எறிதூரல் இல்லை.
வறுக்க வறுக்கத் தீய்ஞ்சுபோகும்
பச்சைச் சோளம் போல
வெயிலடிக்க வெயிலடிக்க
அரண்டுபோகும் காடு
காட்டில் எறிந்த விதைவித்தெல்லாம்
கருகிப் போகுமோ; கருகிப் போகுமோ...
வாழ்க்கை கன்றிப் போகுமோ; கன்றிப் போகுமோ!
தட்டைக்காடும் தவிட்டுக் குருவிகளும்( கவிதைகள்)
கோவேத சுவாமிநாதன்
ப.எண். 12
டிசம்பர் - 2002
No comments:
Post a Comment